புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2016

ஈழ விடுதலைக்காக கண்ணை இழந்த முன்னாள் போராளி தீக்கிரையான பரிதாபம் (படங்கள் இணைப்பு)

கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை
உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது.
ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் மண்ணெண்ணை ஊற்றி விறகை தீமூட்டியுள்ளார். அதன்போது அவர் உடுத்தியிருந்த சேலையிலும் தீப்பிடித்துள்ளது.
கண்பார்வையற்ற அவர் திடீரென எற்பட்ட தீ விபத்தால் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார், சிகிச்சை பயனளிக்காது கடந்த சனிக்கிழமை மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது பூதவுடல் கடந்த 5ஆம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு 6ஆம் திகதி சீனிமோட்டை தற்காலிக மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்த செல்வகுமாரிக்கு மூன்று பெண்பிள்ளைகள், அவரின் கடைசி பிள்ளைக்கு 2 வயது. கணவன் பாஸ்கரன், வாய் பேசமாட்டார் காதும் கேட்காது. மிகவும் வறுமையான குடும்பம் மரணக்கிரியைகள் செய்யவே அவர்கள் இயலாத நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.12472691_1692699944347266_7204416326525166096_n12510459_1692700114347249_3581211489305073093_n 12494998_1692700074347253_77856641628159410_n

ad

ad