புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2016

அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. தகவல்


உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி, உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் (2 கோடி அகதிகள் உள்பட) தங்கள் சொந்த நாட்டை விட்டு அயல்நாடுகளில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990-ம் ஆண்டு கணக்கை விட 67 லட்சம் அதிகமாகும். இந்த பட்டியலில் மெக்சிகோ, ரஷியா, சீனா, வங்காளதேசம் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

அதிக வெளிநாட்டவர்களை தன்வசம் வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன. இந்தியாவில் 52 லட்சம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990-ம் ஆண்டை (75 லட்சம்) விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

ad

ad