புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி




கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் இருந்து பெய்து வருகின்ற கடும் மழையினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற கண்ணகிநகர் கிராம 355 குடும்பங்களுக்கு கடந்த வாரம் சுவிஸ் எழுகை அமைப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது மக்களுக்கு பாதுகாப்பான நீண்டகால வாழ்வாதார வேலைத்திட்டம் இன்னும் இந்த நல்லாட்சி அரசு வழங்கப்படவில்லை.
கிளிநொச்சி பிரதேசத்தில் வறுமை தலை தூக்கி ஆடுகிறது. கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடற்றொழிலை நம்பி இருக்கின்ற கண்ணகிநகர் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தொழில் வாய்ப்புக்கள் ஏதும் அற்று ஒருவேளை சாப்பாட்டுக்காக என்ன செய்வது நினைத்துக்கொண்டு இருக்கும் போது அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருக்கின்ற எமது உறவுகளின் நினைவுகள் எமது மண்ணை நோக்கி இருக்கிறது.
இங்கு இருக்கின்ற மக்கள் தமது உறவுகள் என்றும் அவர்கள் எங்களை நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் உமது இனத்தவர்கள் என்றும் எமக்கு உதவிகள் செய்கிறார்கள்.
இந்த நல்லாட்சி காலத்தில் யுத்தத்தினாலும் கடந்த வெள்ளத்தினாலும் நலிவுற்று இருக்கின்ற எமக்கு இந்த அரசு வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகாலத்திட்டம் எதனையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இராணுவத்தினர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் ஓய்வூதியங்களும், புலமைப்பரிசில்களும், நீண்டகால வாழ்வாதாரமாக வழங்கப்பட்டு கொண்ட இருக்கின்றது.
யுத்தத்தினைகாட்டி அரசு பல நிதிகள் வெளிநாடுகளிடம் இருந்த பெறுகின்றது. அந்த நிதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் செயற்படுகிறதே தவிர மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கான எந்த வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆகவே வறுமையை தனிப்பதற்கு நிரந்தமான பாதுகாப்பான வேலைத்திட்டம் அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.
குமரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ,வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராசா, தம்பிராசபுரம் உழவனூர் செயற்பாட்டாளர் தீபன், முன்னைனாள் கிராமசேவையாளர் சண்முகநாதன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ad

ad