புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2016

கணவனின் கடனை தீர்க்க மனைவி பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து

மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு  கிராமத்தை சேர்ந்தவர்  தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள்
கோந்தாலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் தங்கள் சாதி சங்கம பஞ்சாஸ் என்ற பஞ்சாயத்தில் இருந்து  2 வருடங்களுக்கு முன் ரூ. 9 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.  இது வரை பஞ்சாயத்துக்கு ரூ.2.5 லட்சம் கட்டி உள்ளனர்.தற்போது அவரது சாதி சங்கம் ரூ. 6 லட்சத்தை  விரைவாக கொடுக்க கேட்டு கொண்டது. ஆனால் அந்த பணத்தை கொடுக்க  தீபக்கும் அவரது மனைவியும் மறுத்து உள்ளனர்.இதை தொடர்ந்து அந்த பஞ்சாயத்து அவர்களை ஒதுக்கி வைத்தது.

இது குறித்து தீபக்கின் தாய்மாமா சுபாஷ் ஆக்லே  கூறும் போது:-

சாதி பஞ்சாயத்து தீபக்கின் வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து அவரது மனைவியிடம் தவறாக நடந்து உள்ளனர்.அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்து உள்ளனர்.அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தற்கு அடையாளமாக அவரது வீட்டின் கதவில் செருப்புகளை கட்டி வைத்தனர். இந்த புறக்கணிப்புக்கு பிறகு தம்பதிகள் நாசிக் தப்பி ஓடினர்.  மேலும் சமூதாய உத்தரவை புறக்கணித்து அவரது உறவினர் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய கூடாது என சாதி பஞ்சாயத்து எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. என கூறினார்.

தீபக் மனைவி  சாதி பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களின் பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோவதாக இருந்தால் அவரது கணவர் கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சத்தை செட்டில் செய்வதாக கூறியதாக புகார் கூறினார்.

இந்த நிலையில் தீபக்கின் மாமா சுபாஷ் அக்லே மாராட்டிய அந்தாஷ்ரட்டா நிர்மூலன் சமிதியின் உதவியை நாடினார்.ஆனால் இது வரை இந்த விவகாரம் போலீசில் புகார் ஆக வில்லை.

ad

ad