புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2016

சூதாட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜோகோவிச்

1
டென்னிஸ் சூதாட்ட விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள உலகத்தரவரிசை முதல்நிலை வீரர் நோவாக்
ஜோகோவிச் இது அர்த்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார். கால்பந்து போட்டிகள், கிரிக்கட் போட்டிகள், தடகள போட்டிகள் என அனைத்திலும் சூதாட்டம் இடம்பெற்றதாக  சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது டென்னிஸ் போட்டிகளிலும் சூதாட்ட விவகாரம் தலைதூக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உலகின் முன்னிலை வீரர்கள் பலர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் உலகத்தரவரிசை முதல் நிலை வீரர் ஜோகோவிச், ஓய்வு பெற்ற பிரான்ஸ் வீரர் சாண்ட்ரோவுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு பரிசிஸ் இடம்பெற்ற டென்னிஸ் போட்டியின் போது தோல்வியடைந்தமை முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
இதனை மறுத்துள்ள ஜோகோவிச், ‘ நான் அந்த போட்டியில் தோல்வியடைந்தேன் உண்மைதான். ஆனால் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் இந்த போட்டி குறித்தோ, அல்லது முதல் சுற்றுக்களில் தோல்வியடைந்த முன்னணி வீரர்களின் போட்டிகள் குறித்தோ கதை எழுத முயற்சித்தால் அது அர்த்தமற்றது. இது உண்மையற்றது.’ என தெரிவித்துள்ளார்.

ad

ad