புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

வடமாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்


வடமாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர். 

வடமாகாணத்தில் 05 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பட்டதாரிகளாக வெளியேறப்பட்ட 326 பேருக்கான நியமனக் கடிதங்களே இன்று வழங்கப்பட்டன. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 326 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு மத்திய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 
 
இதுதவிர முகாமைத்துவ உதவியாளர் 173 பேருக்கும, சாரதிகளாக 92 பேருக்கும், கலாச்சார உத்தியோகத்தர்களாக 11 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

                                                   

                                                   

                                                   

ad

ad