புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

காணி விடுவிப்பில் ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு கூட்டமைப்பு வரவேற்பு

வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறு மாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை வரவேற்கின்றோம். அதேவேளை, தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் முக்கியமாக வலியுறுத்துகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.

ஆறுமாத காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை மீள் வழங்க நடவடிக்கை எடுப்பதானது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கால அட்டவணையொன்றை வழங்குவது இதுவே முதல் தடவையாகும். இந்த ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் என்று எம். ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க சர்வதேச செய்தி சேவைக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுமாத காலத்தில் வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இது ஒரு இலட்சிய இலக்காகக் காணப்படுகின்றது. உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைப்பதற்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயற்பாடுகளை ஆறுமாத காலத்தில் முடிவுறுத்துவதற்காக நான் ஒரு பொறிமுறையை உருவாக்கவுள்ளேன். இவ்வருடத்தின் நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான காணிகள் வழங்கப்படும்.

ad

ad