புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2016

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரடியாக மோதிக்கொண்ட கூட்டமைப்பினரின் செயலைக் கண்டித்த சக உறுப்பினர் மோதல் தொடர்ந்தால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் இணைத்தலைவர் பதவியில் அங்கம் வகிக்கும் இருவர்  நேரடியாக மோதிக்கொண்ட நிலமை ஆரம்பத்தில் காணப்பட்டது.
குறிப்பாக இணைத்தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது உரையின் போது இணைத்தலைவர்களாக சட்டப்படி முதலமைச்சரும் , அமைச்சரும் மட்டுமே இருக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்திருந்த மற்றுமோர் இணைத்தலைவரான சிவமோகன் மாவட்டத்தின் இணைத் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகள் இருந்த ஒருவர் இந்த மாவட்டத்திற்கு எதுவும் செய்யாத காரணத்தினால் ஜனாதிபதியால் இந்த இணைத்தலமைப் பதவி வழங்கப்பட்டது . மாவட்டத்தின் அபிவிருத்தி கருதி அதை நானும் ஏற்றுள்ளேன். இது அபிவிருத்தி கூட்டம் அன்றி தீர்ப்பு கூறும் நீதிமன்றம் கிடையாது என நேரடியாகவேமுதலமைச்சரின் கூற்றிக்குப் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வட மாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் . இது இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் கூட்டம் அன்றி  அரசியல்  மேடையல்ல மாறாக கூட்டமைப்பின் பிரதிநிதியை கூட்டமைப்பின் முதலமைச்சரே விமர்சிப்பதும் ஆரோக்கியமான ஒன்றல்ல இந் நிலை தொடருமாயின் நாம் இக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் நிலை ஏற்படும் என்றார்

ad

ad