புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2016

பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி?


பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி நேற்று விவரித்தார்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 2 தீவிரவாதிகள் அங்கு மறைந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய வீரர்கள் 7 பேரும் வீர மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் பதன்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ராஜீவ் மெகரிஷி,  ‘’இந்திய ராணுவ சீருடையை அணிந்திருந்த 4 பேர் கடந்த மாதம் 31–ந்தேதி நள்ளிரவில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 பேரை கடத்தி சென்று பின்னர் விடுவித்தனர். இதைப்போல மறுநாள் சொகுசு கார் ஒன்றின் டிரைவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் காருடன் பதன்கோட் அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.

இவையனைத்தும் தீவிரவாதிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்றும், பதன்கோட் விமானப்படை தளமே அவர்களின் இலக்காக இருக்கக்கூடும் எனவும் கருதிய பாதுகாப்பு படையினர் உடனே உஷாராயினர். அதன்படி விமானப்படை தளத்தில் சிறப்பு படைகள் இறக்கப்பட்டு, தீவிரவாதிகளின் வரவுக்காக காத்திருந்தனர்.

மேலும் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. ராணுவ தளபதி தல்பீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மேற்கு எல்லையில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே சனிக்கிழமை (நேற்று முன்தினம்) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தீவிரவாதிகள் சிலர் விமானப்படை தளத்துக்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டது. வான்வழி கண்காணிப்பு மூலம் இது உறுதி செய்யப்பட்டதும், பாதுகாப்பு படையினரின் அனைத்து பிரிவினரும் தக்க முன்னேற்பாடு மற்றும் ஒருங்கிணைப்புடன் துரிதமாக செயல்பட்டனர்.

இதனால் தீவிரவாதிகள் குறுகிய பகுதிக்குள்ளே முடக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் மதிப்பு மிக்க சொத்துகள் காப்பாற்றப்பட்டன.

விமானப்படை தளத்தில் 2 வெவ்வேறு இடங்களில் இருந்து இன்றும் (நேற்று) துப்பாக்கி சத்தம் கேட்கிறது. எனவே அங்கு இன்னும் குறைந்தது 2 தீவிரவாதிகளாவது மறைந்திருக்கக்கூடும் என்பது உறுதியாக தெரிகிறது.

இதை தவிர வேறு தீவிரவாதிகள் அங்கு உள்ளனரா? என்பது குறித்து உறுதியாக செல்ல முடியாது. இந்த தாக்குதல் நிறைவடைந்து, தீவிரவாதிகளின் உடல்கள் சேகரிக்கப்பட்ட பிறகே அவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியாக கூற முடியும்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் எவ்வித குறைபாடும் இல்லை. இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் போது அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பது கடினம்’’என்று கூறினார்.

பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் நேற்று முன்தினமே முடிவுக்கு வந்ததாகவும், இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் உள்துறை மந்திரி டுவிட்டரில் கூறியிருந்தாரே? என ராஜீவ் மெகரிஷியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தான் கூறியதே உண்மையான நிலவரம் என்றும், இது குறித்து பிறர் என்ன கூறினார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் அங்கு தற்போதும் தாக்குதல் நீடிப்பதால், இது குறித்து மேலும் தகவல்களை வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.

ad

ad