புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் மதிய விருந்தில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள 3 நாள் பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்தியா வந்துள்ளார்.

இன்று தலைநகர் டெல்லியில் 67-வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதையடுத்து அதிபருடன் இன்று மதிய விருந்தில் கலந்து கொள்வதற்காக பிரெஞ்சு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று மதிய விருந்தில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்து பேசினார்.

இதேபோல் மேலும் சில பிரபலங்களுக்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரான்ஸ் நாட்டின் 2-வது உயரிய பொதுமக்களுக்கான விருது என கருதப்படும் ’நைட் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்’ என்ற விருதை நடிகை ஐஸ்வர்யா ராய் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad