சனி, ஜனவரி 23, 2016

யாருக்கு வாக்கு? என்ற கேள்விக்கு, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஏறத்தாழ கருத்துகணிப்பில் சம ஆதரவு


சென்னை லயோலா கல்லூரி முன்னாள்பேரா சிரியர் ராஜநாயகம் தலைமை யிலான ’மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இன்று வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம்  கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பெரும்பாலா னவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாக்களிப்போம் என்று 33.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று 33.1 சதவீதம் பேர் கூறியுள் ளனர்.

யூகத்தில் 2 சதவீதம் முன்னிலை பெற்ற தி.மு.க.வை விட, உண்மையான வாக்கு களை பொருத்தவரை அ.தி.மு.க.வே முன்னிலை பெற்றி ருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டி மேலும் தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி என்ற அந்தஸ்தில் அ.தி.மு.க. முதன்மை இடத்தில் இருப்பது இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளது.