புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2016

அ.தி.மு.க. முடிவால் கூட்டணி அமைவதில் இழுபறி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எதையும்
முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காததால் தமிழகத்தில் கூட்டணிகள் அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் த.மா.கா. போன்ற கட்சிகளுக்கு தி.மு.க.வும் வலை விரிப்பதால் நால்வர் அணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கட்சிகள், இப்போதே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளன. த.மா.காவை சேர்க்கும் விடயத்திலும் தி.மு.கவும் மக்கள் நலக்கூட்டணியும் மோதுகின்றன.
ஆனால் த.மா.கா. நிர்வாகிகள் அ.தி.மு.க. கூட்டணியில் சேரவே விரும்புகின்றனர். இந்த குழப்பமான சுூழலில் அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாடு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுவிடும் என இந்த கட்சிகள் எல்லாம் எதிர்பார்த்தன. அப்படி அறிவிக்கப்பட்டால் தங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும் என நினைத்தன.
ஆனால் சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, கூட்டணி குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் காத்திருந்த கட்சிகள் மட்டுமின்றி ஆளும் அ.தி.மு.க.வினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் சுூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்பேன் என ஜெயலலிதா புதிர் போட்டு பேசியதால் ஆளும் அணியில் எந்தந்த கட்சிகளுக்கு இடம் கிடைக்கும்் கிடைக்காது என தெரியாமல் த.மா.கா. போன்ற கட்சிகள் கவலை அடைந்துள்ளன. இந்த சுூழ்நிலையை பயன்படுத்தி மக்கள் நலக்கூட்டணியை தங்கள் பக்கம் கொண்டு வர தி.மு.க. தலைமை வேகமாக காய் நகர்த்துகிறது.
கூடவே அ.தி.மு.க., கூட்டணிக்காக அலை பாய்ந்து கொண்டிருக்கும் த.மா.கா.வையும் தி.மு.க. பக்கம் திருப்பும் முயற்சி நடக்கிறது. இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அவசரமாக த.மா.கா. அலுவலகம் சென்று அக்கட்சி தலைவர் வாசனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். தி.மு.க. - பா.ஜ. - மக்கள் நலக்கூட்டணி என மூன்று தரப்பும் கட்சிகளை தேடி இப்படி அலைவதால் தமிழகத்தில் கூட்டணிகள் அமைவதில் குழப்பமும் இழுபறியும் நீடிக்கிறது.
லோக்சபா தேர்தலில் பா.ம.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தது போல இப்போதும் அமைக்க தமிழக பா.ஜ.க ஆசைப்படுகிறது. ஆனால் அதற்கு பா.ம.க. பிடி கொடுக்காததால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இதற்கிடையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் விருப்பமும் இக்கட்சியினருக்கு உள்ளது. சாதகமான பதில் இல்லாததால் கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க தலைவர்கள் திணறுகின்றனர். அதனால் கட்சியின் தேசிய தலைவர் அமித்சாவிடம் பேசவும், அவர் ஆலோசனைப்படி செயல்படவும் முன்வந்துள்ளனர். இதற்காக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அடுத்த வாரத்தில் டில்லி செல்ல உள்ளார். இதற்கிடையே கூட்டணி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் மோடி விரைவில் பேசக்கூடும் எனவும் தகவல் பரவி உள்ளது. 

ad

ad