புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

மன்னார் - அம்பாள்புரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வடக்கு முதல்வர் திடீர் விஜயம்


மன்னார் - எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆலயத்தின் கட்டடப்பணிகளை பார்வையிட்டார்.
இவர் நேற்று மதியம் குறித்த கோயிலை சென்று பார்வையிட்டுள்ளார்.
மன்னாரில் இடம் பெற்ற நிகழ்வொன்றிற்கு வருகை தந்த முதலமைச்சரிடம், முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் நேரடியாக ஆலயத்திற்கு வருகை தருமாறு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த வேண்டுகோளுக்கு அமைவாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் சென்று, குறித்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, குறித்த ஆலயத்தின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.

ad

ad