ஞாயிறு, ஜனவரி 31, 2016

யார் எவ்வாறான கோரிக்கை விடுத்தாலும் வேண்டுகோள்களை முன்வைத்தாலும் அரசியல் அமைப்பில் சமஸ்டி முறைமையிலான ஆட்சிக்கு இடமில்லை

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் உத்தேச அரசியல் அமைப்பில் சமஸ்டி ஆட்சி முறைமை குறித்த எந்தவொரு யோசனையும் உள்ளடங்காது என அவர் தெரிவித்துள்ளார்
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் அமைப்பு குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யார் எவ்வாறான கோரிக்கை விடுத்தாலும் வேண்டுகோள்களை முன்வைத்தாலும் அரசியல் அமைப்பில் சமஸ்டி முறைமையிலான ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.