புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கத் தீர்மானம்

காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இம்முறை வரவு செலவுத்திட்ட தீர்மானத்திற்கு அமைய 17 இலட்சம் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.ஏ.கே.மஹாநாமா தெரிவித்துள்ளார்.

இதன்கீழ் சுவர்ணபூமி, ஜயபூமி, ஆகிய உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கும், ஏனைய அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பதவர்களுக்கும் நிரந்தர காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான காணி சட்டத்திருத்தத்தை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் காணி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad