புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2016

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு! உயர்மட்ட பதவி நிலைகளில் அதிரடி மாற்றம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சுப் பதவிகளை வகிக்காதவர்களுக்கு கட்சியின் தவிசாளர், செயலாளர் ஆகிய பதவிகளை வழங்குவது குறித்து பேசப்பட்டு வருவதாக, கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்களை குறித்த பதவியில் அமர்த்தியுள்ளதால், கட்சியின் இணைப்புப் பணிகள் மந்தமடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியை வலுப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவிக்கு, கபீர் ஹசீம் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நியமிக்கப்படுவது குறித்தும் கட்சிக்குள் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த மாற்றங்களுடன் எதிர்காலத்தில் பிரதித் தலைவர் பதவிகள், தலைமைத்துவச் சபை ஆகியவையும் இரத்தாகும் நிலை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ad

ad