ஞாயிறு, ஜனவரி 31, 2016

சிறைச்சாலையில் முழு இரவையும் தூங்காமல் கழித்த யோசித்த

வரும் பதின்மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்...
நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் கொழும்பு ரிமாண்ட் சிறைசாலைக்கு அழைத்துவரப்பட்ட யோசித்த அங்குள்ள கட்டணம் செலுத்தப்பட்ட சிறைச்சாலை அறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் யோசித்த ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்ட முதல் நாள் இரவை விடியும் வரை தூங்காமல் கழித்ததாக சிறைசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான இடங்களில் என்னால் உறங்க முடியாது என ஆதங்கப் பட்டதாவும் எனது தந்தை என்னைக் கைவிட மாட்டார் எனவும் யோசித்த தெரிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.