புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர் மாநகர பேருந்து நிலையத்தில்,  இன்று காலை முதல் மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. பாலவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர்.


அவர்களில் சிலர், இந்த திட்டத்தை வரவேற்றும், பத்து டோக்கனும் மாத பாஸாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.


மேலும் சிலர், "மாதத்துக்கு பத்து டோக்கன்தான் என்கிறார்கள். இந்த பத்து டோக்கனும் பத்து பஸ்சுல ஏறினா ஒரே நாள்ல போய்விடும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள் என புகார் தெரிவித்தனர்.இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)

ad

ad