புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

கூட்டணிக்கு வர திமுகவுக்கு கேப்டன் போடும் அடேங்கப்பா நிபந்தனை!கேட்டது 114 தருவதோ 60



வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் காயை நகர்த்த தொடங்கி இருக்கின்றன. இப்போதுள்ள சூழ்நிலையில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி மட்டுமே உறுதி செய்
யப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில்,  அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பெரும்பாலான கட்சிகள் அந்த கூட்டணியிலிருந்து விலகி விட்டன. அடுத்து, மக்கள் நலக்கூட்டணியில் வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பா.ம.க தேர்தலை நோக்கி பயணித்து வருகிறது. பி.ஜே.பியும் கூட்டணி குறித்து தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூட்டணியை பொறுத்தவரைக்கும் விஜயகாந்த், எந்தப்பக்கம் செல்வார் என்ற பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று கூறிய விஜயகாந்த், அங்கும் எதுவும் சொல்லவில்லை. விஜயகாந்த் தங்களுடைய அணிக்கு வருவார் என்று தி.மு.க, பி.ஜே.பி, மக்கள் நலக்கூட்டணி ஆகியவை சொல்லி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தே.மு.தி.க. தொண்டர்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்றால் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளார் ஸ்டாலின் ஆகியோர் தி.மு.க கூட்டணியில் சேர விஜயகாந்த்துக்கு பகிரங்கமாகவே அழைத்து விடுத்துள்ளனர். அந்த அழைப்புக்கு இதுவரை விஜயகாந்த தரப்பிலிருந்து எந்தவித சிக்னலும் காட்டப்படவில்லை.

கூட்டணி குறித்து தே.மு.தி.க நிர்வாகிகள் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டும் என்றுதான் கேப்டனிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு கேப்டனும் சிக்னல் காட்டி விட்டார். இதுதொடர்பாக நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 114 சீட்கள் வரை கேட்கப்பட்டது. அதற்கு தி.மு.க. தரப்பு சம்மதிக்கவில்லை. அடுத்து எத்தனை சீட்கள் கொடுத்தாலும் பரவாயில்லை. துணை முதல்வர் பதவி வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கும் தி.மு.க.விடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தலில் 50 சதவிகிதம் என்று தே.மு.தி.க தரப்பில் கேட்கப்பட்டதற்கும் தி.மு.க தலைமை அமைதியாக இருக்கிறது.

50 முதல் 60 சீட்களை தருவதாக தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த சீட்களுக்கு சம்மதித்தாலும் ஆட்சியில் பங்கு அல்லது துணை முதல்வர் பதவி வழங்குவதாக உறுதி அளித்தால் அடுத்த நிமிடமே தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டணி உறுதியாகிவிடும். தி.மு.க.வுடன் கூட்டணி அமையவில்லை என்றால், தனித்து போட்டியிடவும் கேப்டன் முடிவு செய்துள்ளார். கேப்டன் தலைமையில் கூட்டணி அமைக்கவும் ஒரு யோசனை உள்ளது. இந்த அணியில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் வந்தால் வரவேற்போம். கூட்டணி குறித்து விரைவில் நடைபெற உள்ள மகிளரணி மாநாட்டில் அறிவிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்" என்றனர். 

ad

ad