புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்!


லகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது.

பிரபல மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மொத்தம் 230 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18 லட்சம் மக்கள் தொகை கொண்ட வியன்னா நகரம் முதலிடத்தை பிடித்தது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து ஜெர்மனியின் மியூனிச் கனடாவின் வான்கூவர் நகரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன.
உலகின் மிகவும் பாப்புலரான நகரங்களான நியூயார்க், லண்டன், பாரீஸ் போன்றவை முதல் 30 இடங்களுக்குள் கூட இடம் பெறமுடியவில்லை.பொதுவாகவே இந்த பட்டியலில் ஜெர்மன் மொழி அதிகமாக பேசப்படும் நகரங்கள் முதல் 7 இடங்களுக்குள் வந்து ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த மியூனிச், ஃப்ராங்க்பர்ட், டாசல்டோர்ப் உள்ளிட்ட நகரங்களிலும் வியன்னாவிலும் ஜெர்மன் மொழி பேசுபவர்களே அதிகம்.
உலக வங்கி அறிக்கையின் படி ஆஸ்திரியா, உலகிலேயே ஜி.டி.பி  (மொத்த உள்நாட்டு உற்பத்தி ) அதிகமாக உள்ள நாடுகளில் 2வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரியாவுக்கு பிறகுதான் மற்ற பணக்கார நாடுகளான ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் நாடுகள் வருகின்றன.
 லண்டனில் 100 சதுர மீட்டர் பரப்பு கொண்ட வீட்டுக்கு 2 ஆயிரம் டாலர் மாத வாடகையாக கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால் வியன்னாவில் 600 டாலர்களே  போதுமானது என மெர்சர் ஆய்வு தெரிவிக்கிறது. பொது மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், பொழுது போக்கு வசதிகள் வழங்குவதிலும் வியன்னா நகரம் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக 'மெர்சர் 'ஆய்வில் வியன்னா நகரமே முதலிடத்தை பிடித்து வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தியாவை பொறுத்த வரை தெலுங்கானாத் தலைநகர் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரம் 139வது இடத்தை பெற்றுள்ளது.  புனே 144வது இடமும்  பெங்களுரு 145வது இடமும் சென்னை 150வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பைக்கு 152வது இடமே கிடைத்துள்ளது. கொல்கத்தா 160வது இடத்தையும் தலைநகர் டெல்லி 161வது இடத்தையும் பிடித்துள்ளன. அதே வேளையில் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் ஈராக் தலைநகர் பாக்தாத் முதலிடத்தை பெற்றுள்ளது. 

ad

ad