புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2016

குஜராத்தில் பரிதாபம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 37 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள நவ்சாரி நகரில் இருந்து உகாய் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்தனர். சுபா கிராமத்தில் உள்ள பூர்ணா நதிக்கு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக ஓட்டுனர் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றில் கவிழ்ந்தது. விழுந்த வேகமாக நீரில் மூழ்கியது.
இந்த கோர விபத்தில் 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் உள்பட 15 பேர் பேருந்திலேயே சிக்கியிருப்பதால் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37–ஐ தாண்டி உள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் மாநில  முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ad

ad