புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2016

பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், தி.மு.க.வும் விஜயகாந்த்தை இழுக்க முயற்சித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்த் எங்களது கூட்டணியில்தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிகர் மாதவன் நடித்து  வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை
ஜாம்பவான் மைக் டைசன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்றுபடத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.

இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்,  ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்தையும் மைக் டைசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மைக் டைசனை சுமார் 51 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் பின் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

மைக் டைசனின் இந்த பகிர்வால், இறுதிச்சுற்று படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில்  இறுதிச்சுற்று  வெளியாகி உள்ளது. 

ad

ad