புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

உணவு விஷமடைந்ததால் 65 போர் வரை வைத்தியசாலையில் அனுமதி

காத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர் குறிப்பிட்டுள்ளார்.

22 சிறுவர்களும், 25 பெண்களும், 23 ஆண்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று பெற்றுக் கொண்ட உணவை உட்கொண்டதன் பின்னரே இவர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வயிற்றோட்டம், தலைவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்றவற்றுடன் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.

ad

ad