திங்கள், பிப்ரவரி 01, 2016

யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்வையிட சென்றுள்ளனர்.
இவர்கள் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்
யோஷித்த ராஜபக்ஸ சி.எஸ்.என் நிறுவனத்தின் தலைவர் என்பது பொய்யான விடயம் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் விமல் வீரவன்ச இதன் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியாத நிலையிலேயே அவருடைய புதல்வரை கைது செய்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவர்களே உண்மையான அரசியல் கைதிகள் எனவும் இவர்களின் விடுதலைக்காக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஸவும் தனது புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவை பார்வையிடுவதற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.