புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2016

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சு எச்சரிக்கப்படுகிறது: மன்னார்குடியில் வைகோ பேச்சு

மன்னார்குடியில் திங்கள்கிழமை மக்கள் நலக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கலந்துகொண்டு பேசுகையில்,

மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் டெல்டாவில் மீத்தேன், பாறை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். மணல், கிரானைட், மதுபானக் கொள்ளையில் ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இருவரும் குற்றவாளிகள். அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது நீடித்தால் தமிழகம் நாசமாகிவிடும். 

மாற்றத்தை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். மக்கள் நலக்கூட்டணி யாருக்கோ மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சு எச்சரிக்கப்படுகிறது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மக்கள் நலக் கூட்டணியை பார்த்து ஏனோதானோ என்றும், 4 கட்சித்தலைவர்களும் ஒன்றாக பயணிப்பர்களா என்று நினைத்தவர்கள் தற்போது கதிகலங்கியுள்ளனர். ஊடகங்கள் கூட குறைத்து மதிப்பிட்டன. கூட்டணி தொடரும் என்பதை உறுதிப்படுத்தி வருவதுடன், மாற்றத்துக்கான சக்தி இக்கூட்டணி தான் என்பதையும் நிருபித்து வருகிறது. 

இக்கூட்டணி தலைவர்கள் மிகத்தெளிவாக உறுதியாக கைகோர்த்து களப்பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். கூட்டணிக் குறித்த வதந்தியை கூட்டணிக் கட்சியினர் நம்ப வேண்டாம். கூட்டணியில் உள்ளவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று இருமாப்புடன் உள்ளனர். தமிழகத்தில் ஊழல் பணம் கொட்டிக்கிடக்கிறது. இதற்காக ஒரு தனி நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.


முப்போகம் விளைந்த காவிரி டெல்டா தற்போது ஒரு போகத்துக்கு வழியில்லாமல் உள்ளது. காவிரிப் பிரச்சனைக்கு காரணமானவர்களை விரட்ட உருவாக்கப்பட்டது இக்கூட்டணி. அதிமுக, திமுகவுக்கு மாற்று 3-வது அணியாக உருவெடுத்துள்ளது மக்கள் நலக் கூட்டணி. மது, மதவெறிய தடுத்து, ஊழற்ற ஆட்சியை இக்கூட்டணி கொடுக்கும். தமிழகத்தில் இதுவரை எந்தக்கட்சியும் கூட்டணியை அமைக்கவில்லை. முதல் கூட்டணி, முதல் பிரசாரம் மக்கள் நலக் கூட்டணியே. கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது என்றார். 

இந்தி்ய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பேசியது: மக்களின் நலன் காத்து, நல்ல நோக்கம் நோக்கி, கொள்கை லட்சிய வழியில் பயணித்து மாற்று ஆட்சிக்கான முயற்சிக்கும், கடந்த 40 ஆண்டுகளாகமாக தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அமைக்கப்பட்டது இக்கூட்டணி.

திமுக, அதிமுக வேறுவேறு கட்சிகள் என்றாலும் ஊழல், முறைகேடுகள் செய்வதில் மாறுபாடு இல்லாது ஒத்த நிலைபாடு கொண்டுள்ளன. அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக வந்தபோது தமிழகத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவை அவருக்கு பிறகு அவர் வழியில் ஆட்சி வந்ததாக கூறும் திமுக, அதிமுகவினர் லஞ்சம், ஊழல் என வேறு திசையில் பயணித்து மாற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருவதுடன் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகின்றனர்.

கோயில் மனையில் குடியிருப்பவர்களை அழைத்து தற்போது நமக்குநாமே பயணத்தில் பேசும் ஸ்டாலின்.திமுக ஆட்சியில் தான் பகுதி வசூல் என்று இருந்ததை வாடகை என்ற மாற்றம் என சட்டம் கொண்டு வந்தார்கள். அதனை தான் அதிமுக ஆட்சியில் தற்போது நடை முறைப்படுத்தி வருகின்றனர். கடந்த 1971 ல் திமுக ஆட்சியில் எந்த காரணத்தை கூறி மதுக்கடைகளை திறந்தார்களோ அதே காரணத்தை கூறி  பூரணமதுவிலக்கை கொண்டு வர முடியாது என சட்டப்பேரவையில் துறை அமைச்சர் கூறுகிறார்.  

கும்பகோணத்தில் மகாமகம் திருவிழாவுக்கு தமிழகஅரசு ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சிறுபானமையினர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மாகாமகம் முடியும் வரை கும்பகோணத்தில் மாமிச விற்பனை கடைகள் இருக்கக் கூடாது என இந்துத்துவா பிரசாரம் செய்து அச்சுருத்தி வருகிறது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது: மது, ஊழல், மக்கள் நலனை பாதிக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள, மத்திய, மாநி்ல அரசுகளின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துச் செல்ல போராட்டம், பிரசாரம் செய்யவே மக்கள் நலக்கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டு அதன் செயல்பாடுகளுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று கூட்டு இயக்கம் என்பது மக்கள் நலக் கூட்டணியாக மாறி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கூட்டணியை ஆரம்ப கட்டத்திலேயே முடக்கிவிட வேண்டும் என அதிமுகவும்,திமுகவும் எடுத்த முயற்சியும் எண்ணமும் நிறைவேறவில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக போன்றவற்றுடன் கூட்டணி இல்லாது உறுதியான கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதே மக்கள் நலக் கூட்டணியின் நோக்கம். திமுக கூட்டணி அழைத்தும் எந்த கட்சியும் சேரவில்லை. அதிமுக கூட்டணியில் எந்த கட்சி உள்ளது என கூறமுடியாத நிலையில் உள்ளது. 


கருணாநி்தி குடும்பத்தினர் மீது பல்வேறு வழங்குகள், ஜெயலலிதா மீது சொந்து குவிப்பு வழங்கு உள்பட பல வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை. இவற்றிலிருந்து அவர்கள் வெளிவர முடியாத நிலை. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ரூ.1.6 லட்சம் கோடிக்கு மதுரை மாவட்டம் மேலூரில் கிரைனைட் எடுக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சிறப்பு அதிகாரி சகாயம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த 20 ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த கருணாநிதி. ஜெயலலிதாவும் இது பற்றி அறிக்கையோ, பதிலோ அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இனியும் ஊழல் கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பதுடன்,ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வந்து ஊழல்,முறைகேடாக சேர்த்த சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்வோம் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 12 விவசாயிகளும், தமிழகத்தில் முழுவதும் மொத்தம் 32 விவசாயிகள் விவசாயம் தற்கொலை செய்து கொண்டனர் என்றார் ராமகிருஷ்ணன்

ad

ad