புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் பரபரப்பு!

கிறிஸ்தவர்களை இழிவாக பேசியதாக, சீமானை கண்டித்து ராமேஸ்வரத்தில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,  கிறிஸ்தவ மதம் குறித்தும், அவர்களது புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் விமர்சனம் செய்து பேசியது, தற்போது 'வாட்ஸ் அப்'பில் வைரக பரவி வரும் நிலையில்,  சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சீமானின் பேச்சுக்கு எதிராக ராமேஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சீமானின் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் குதிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.

தற்போது ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் போஸ்டரில், ''பணந்தின்னி சீமானே மன்னிப்பு கேள்...
கிறிஸ்தவ மக்களின் புனித நூலான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளை கேவலப்படுத்தியும், கிறிஸ்தவத்தின் அடிப்படை புனித ஆத்மார்த்த தத்துவமான 'திவ்ய நற்கருணை' உட்கொள்வதை 'பணந்தின்னி கிறிஸ்தவர்கள்' என இழிவுபடுத்தி பேசிவரும் தமிழ் உணர்வுகளை பணத்திற்காக அடகு வைக்கும் போலித்தமிழன் பகல் குடிகாரன் சீமானை காவல்துறையே.. தமிழக அரசே... கைது செய்" போன்ற வாசகங்களுடன் ராமேஸ்வரம் தீவு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளன.
இந்நிலையில், இது குறித்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் நிர்வாகி போஸ்கோ நம்மிடம் கூறும்போது, ''கிறிஸ்தவ மதம் குறித்து விமர்சனம் செய்துள்ள சீமானின் செயல் மன்னிக்க முடியாதது. 3 ஆண்டுகளுக்கு முன்பே சீமான் இப்படி பேசி இருந்தாலும், அது இப்போதுதான் வெளியாகி உள்ளது. கிறிஸ்தவ மதத்தினரை அவமதிக்கும் சீமானின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால், நாங்கள் அடுத்தக்கட்டமாக சீமான் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம்" என்றார்

ad

ad