புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016


சொல்வது ஒன்று, செய்வது இன் னொன்று என்பது இலங்கை ஆட்சியாளர் களுக்குப் புதிதல்ல. தேர்தல் நேரத்தில் கொடுத்த ’கூட்டாட்சி’ வாக்குறுதியை,
ஓராண் டுக்குள்ளாகவே  மறந்து, மறுத்திருக்கிறார் இலங்கை அதிபரான மைதிரி பால சிறீசேனா. ராஜபக்சே மீதான மக்க ளின் கோபத்தையும், தனது வாக்குறுதியையும் முதலீடாக்கி, அங்கே வெற்றிபெற்றவர் சிறீசேனா. தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகம் வாழும் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் அப்போது ராஜபக்சேவுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. சிங்களப் பகுதிகளை விட தமிழர் பகுதிகளில்தான், அதிகமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அது ராஜபக்சே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இப்படி ராஜபக்சேவின் சரிவை சாதகமாக் கிக் கொண்டு ஆட்சி பீடம் ஏறிய சிறீசேனா, அண்மையில் நடந்த தனது சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, கூட்டாட்சி (சமஷ்டி)  அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று அறிவித்திருக் கிறார். இது தமிழர்கள் மத்தியில் பலத்த தகிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்தும், புதிய அரசியலமைப்புச் சட்டதால் தமிழர்களுக்கு ஏற்படும் சாதக பாதகம் குறித்தும், இலங்கையைச்  சேர்ந்த பிரபல ஆவணப் பட இயக்குனர் சோமிதரனிடம் பேசினோம். அவர் நம்முன் வைத்த கருத்துக்களில் இருந்து...

ஏமாற்று வேலை :
இலங்கை 1948-ல் சுதந்திரம் அடைந்த போது, சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தது. அந்த சட்டம் ஒற்றைஆட்சியை ஸ்தாபிக்கும்  அரசியல் அமைப்புச் சட்டம். எனவே அன்றிலிருந்தே ஒற்றை ஆட்சிக்கு எதிரான குரல், இலங்கையில் பலமாக எதிரொலித்து வருகிறது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி அமைப்புதான் தேவை என்ற கோரிக் கையும் அப்போதிருந்தே  முன் வைக்கப்பட்டது. எனினும், பிரிட்டனில் இருப்பது போலவே ஒற்றை ஆட்சி முறையை இலங்கையில் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள். ஒற்றைக்குள்ளான இணைப்பாட்சியாக அதை செயல்படுத்தலாம் என்று பேசினார்கள். ஒற்றை ஆட்சிக்குள்ளான இணைப்பாட்சி என்பது ஒரு தந்திரமான வேலைதான். ஒற்றை ஆட்சிக்குள் ளேயே மாகாண சபையை வைத்துக் கொள்ள லாம் என்பதும் ஏமாற்று வேலைதான். இதை ஏற்கமுடியாது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் சரிக்குச் சரியான சம உரிமைகள் பாராளு மன்றத்தில் இருக்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் கூட்டாட்சித்  தத்துவத்தின் அடிப்படையில் எல்லாமே இருக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த  இரண்டுமே ஆட்சியாளர்களால் தொடர்ந்து நிராகரிக்கப் பட்டிருக்கிறது.

சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு சட்டம் எங்கே?
சுதந்திர இலங்கையில் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்தது. அப்போது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ’ஆர்ட்டிகள் 29 (2) ’என்ற சட்டமும் அங்கே இருந்தது. அந்த சட்டத்தின், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,  சிறுபான்மையினருக்குப் பாதகமான, எந்த அரசியல் மாற்றமும் நிகழக் கூடாது, அதற்கான சட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என்பதுதான். ஆனால் அந்த சட்டம் உரியவகை யில் மதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல; 1972-ல் பண்டாரநாயகா தலைமையிலான ஒரு புதிய அரசியல் அமைப்பு உருவானபோது, அந்த சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு சட்டத்தையே மொத்தமாகத் தூக்கிவிட்டார்கள். அது எங்கே போனது என்றே தெரியவில்லை. 
பௌத்த நாடு
72 காலகட்டத்தில்தான் இலங்கை, குடியரசு நாடாக ஆனது.  ஜெயவர்த்தனா ஆட்சியில், அதாவது 78-ல் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதன் மூலம் இலங்கையை மறைமுகமாக, ஒரு பௌத்த சிங்கள நாடாக  அறிவித்தார்கள். அப் போது இலங்கை அரசாங்கம், ஏதேச்சாதிகார ஒற்றை ஆட்சியின் உச்சபட்ச வடிவமாக மாறியது. இதன் மூலம் பாராளுமன்றத்திடம் இருந்த அதிகாரங்கள், அதிபர் என்கிற ஒரு தனிநபரின் கைக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதன் பின்னர், பல அரசியல் திருத்தங்கள் நடந்தாலும், இப்போதுதான் அரசியல் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்து கிறார்கள். இப்போதைய அரசியல் அமைப்பு மாற்றத்தால், இனப் பிரச்சினை இனி எந்த அளவுக்குப் பிரதிபலிக்கும் என்ற கேள்விதான் நம்முன் எழுகிறது.

அதிபரின் அதிகாரமும் தமிழர்களின் உரிமையும்
இலங்கையின் முழு அதிகாரத்தையும் அதிபரிடம் கொடுக்காமல், குறைந்தபட்ச அதிகாரத்தை அதிபர் வைத்துக்கொண்டு, மீதமுள்ள அதிகாரத்தை  பாராளுமன்றத்திடம் கொடுப்பதுதான் இப்போ தைக்கு இவர்களின் அடிப் படைச்  சிந்தனையாக இருக் கிறது. ஒரு முழுமையாக, அர சியல் அமைப்பு வரைவு வரும் போதுதான், சாதக பாதகம் எப்படி என் பது தெளி வாகத் தெரிய வரும். இந்த அரசியல் அமைப்பு மாற்றத்தால், தமிழ் மக்க ளுக்கு என்ன தீர்வு ஏற் படும் என்ற கேள்வி தான் பிரதானமாக எழுகிறது. இலங்கை சுதந்திரம் அடை வதற்கு முன்பே, கூட்டாட்சியை ஒத்துகொண்டு இருந்தால்,  போர் களை எதிர்கொள் ளும் நிலைமைக்கு இலங்கை தள்ளப் பட்டிருக்காது. கூட்டாட்சி இங்கே சாத்தியமாகாது என்றுதான் இன்னு மும் சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள்.
போர் முடிந்து இத்தனை ஆண்டு கள் ஆகியும்  மக்க ளுக்கு ஒரு  தீர்வும்  ஏற்படவே இல்லை. போர்க்குற்ற விசா ரணையை புதிய அர சும் மூடி மறைக்க முயல்கிறது.  இப் போது சிறீசேனா வால் கொண்டு வரப்படும்  புதிய அரசியல் அமைப் பில், தமிழர்களுக் கான உரிமைகளை எந்த அளவுக்கு  வரையறுப்பார்கள் என்பதற்கு உத்தர வாதம் இல்லை. ஏனென்றால் இவ ரது அரசியல் சட் டம் கூட்டாட்சிக்கு இடம் இல்லை என்கிறது. இதன் மூலம் தமிழர்களை வஞ்சித்திருக்கிறார் சிறீசேனா. தமிழர்களின் உரிமை என்பது கூட் டாட்சியில்தான் சாத்திய மாகும். .

இன்னும் தொடரும் ராணுவம்
சிறீசேனா ஆட்சி அமைந்த பின்னர், தமிழர் பகுதியில் இருந்த ராணுவம்  படிப்படியாக வெளியேற்றப்பட்ட போதும், வடக்குப் பகுதியைவிட்டு அது இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. மக்களின் வீடுகள், பொது அலுவலகங்களை முற்றுகையிட்டிருந்த ராணுவம், இப்போது வனப்பகுதி முகாம்களில் இருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கைக்கான தோற்றப்பாடு  மட்டும் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு அரசியல் பேரவையில் தமிழர்களின் பங்களிப்பு என்பது கிடையாது. ஆனால் இப்போது கொண்டு வரப்படும் மூன்றாவது அரசியல் அமைப்புச் சட்டம், மீண்டும் தமிழர்களை  கிளர்ச்சியை நோக்கித் தள்ளாதவாறு அமையவேண்டும்.  

அமைதிக்குத் தயாரா?
இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக விசாரணையைத்  தொடங்கவேண்டும் என்றுதான், தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா ஆணையர் ஜெய்த் அல் உசேன் சொல்கிறார். வெளிநாட்டு விசாரணை அமைப்புகள் இலங்கையில் வந்து விசாரிக்க சாத்தியக் கூறுகள் குறைவு. அரசியல் அமைப்புச் சட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே, நேர்மையான விசாரணை சாத்தியமாகும். இலங்கை அர சாங்கம் தன்னுடைய ராணுவத்தை விசாரணைக் குள் ஒருபோதும் கொண்டுவராது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கும், போர்க்குற்ற விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருக்கும் அரசியல் அமைப்பை மாதிரியாகக் கொண்டு, கூட்டாட்சியை உருவாக்கினால், இலங்கை  அமைதி நாடாகும். இதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

-சி. ஜீவாபாரதி

ad

ad