புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2016

நெல்லில் புல், ரோஜாவில் முள், திருவாரூரில் கருணாநிதி: போட்டு தாக்கிய பண்ருட்டியார்!

கன்றுக் குட்டிக்காக தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற ஊர் திருவாரூர். எப்படி கருணாநிதி இம்மண்ணில் பிறந்தார்?
யோசித்து  பார்த்தால், நெல் விளையும் இடத்தில்தான் புல் விளையும், ரோஜாவோடு முள் வளரும் என்பதுதான் கண் முன்னே நிற்கிறது" என அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் காமராஜ், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், “மக்கள் சொன்னால் இந்தத் தொகுதியில் நிற்கிறேன் என்று கருணாநிதி தற்போது திருவாரூர் வந்தபோது சொல்லி இருக்கிறார். இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகு தேர்தலில் நிற்க மாட்டார். அப்படி அவர் தேர்தலில் நிற்க விரும்பினாலும் ஸ்டாலின் கூட கருணாநிதிக்கு சீட் தர மாட்டார். சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். சிலர் வயது அடிப்படையில் கட்டாய ஓய்வு அடைவார்கள்.  வரும் தேர்தலில் கருணாநிதிக்கு கட்டாய ஓய்வு கொடுங்கள்.

திருவாரூர் தர்மத்தின் தலைநகரம், மனுநீதிச் சோழன் ஆண்ட மண், கன்றுக் குட்டிக்காக தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற ஊர் திருவாரூர். மகனையே மண்ணில் சாய்த்தவர் மனுநீதிச் சோழன் – மகனையே முதல்வராக்க துணிந்தவர் கருணாநிதி. எப்படி கருணாநிதி இம்மண்ணில் பிறந்தார்? யோசித்து  பார்த்தால், நெல் விளையும் இடத்தில்தான் புல் விளையும், ரோஜாவோடு முள் வளரும் என்பதுதான் கண் முன்னே நிற்கிறது.
திருவாரூரில் 'காலம் எனக்கு இடம் தரும், தராவிட்டால், அந்தக் காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் எனக்குத் தெரியும்' என்று பேசினாராம். பின்வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. கடல் வற்ற மீன்கள் கருவாடாக,  குடல் வற்றி செத்ததாம் கொக்கு. இலங்கைக்காரன், மீன்பிடிக்க கடலுக்கு போனால், அவன் ஆளைப் பிடிச்சுட்டு போயிடுறான். மீனுக்கு எல்லை தெரியுமா ? அதைப் பிடிக்கிறவங்களுக்கு மட்டும் எல்லை தெரியுமா? அதுவும் செல்கிறது. அதைத் தேடி இவர்களும் செல்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்களுக்கு நேர்மை, அறிவு, பண்பு எல்லாம் வேண்டும். அப்போதுதான் ஆட்சி சிறக்கும்.  ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது, காங்கிரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற வேண்டியதுதானே.

கருணாநிதி ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார். எது ஜனநாயகம்? ஆயிரக் கணக்கானோர் வேட்பு மனு தாக்கல் செய்வது ஜனநாயகமா? இல்லை, குடும்பமே கழகம் என்றிருப்பதற்குப் பெயர் ஜனநாயகமா? யாரும் எங்கே வரலாம் என்பதற்கு உதாரணம் அதிமுக" என்றார். 

ad

ad