புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

மேல் மாடியில் இருந்து மைத்திரியும் மகிந்தவும் சிரித்துக் கொண்டு தான் வந்தார்கள்

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பொறுப்பினை ஒப்படைத்தார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு கூட்டமொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துரைக்கையில்,
மைத்திரிபால சிறிசேன சட்ட ரீதியாக தலைமைப் பதவிக்கு தெரிவானார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஓர் நாளில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்தார்.
மஹிந்த ராஜபக்சவும் அங்கிருந்தார். அப்போது கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் இருந்தார்கள். மஹிந்த, மைத்திரி, சமல் மூவரும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மேல் மாடிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே, கட்சித் தலைமைத்துவம் மைத்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
எமக்கு தெரிந்தவகையில் எவரும் அச்சுறுத்தி கட்சித் தலைமைப் பொறுப்பினை பெற்றுக்கொள்ளவில்லை. மேல் மாடியிலிருந்து மஹிந்தவும் மைத்திரியும் சிரித்துக்கொண்டேதான்
வந்தார்கள்.
மஹிந்த எம் முன்னிலையில் மைத்திரியிடம் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார். இதன் காரணமாகவே நாம் மைத்திரியுடன் கட்சியில் முன்னோக்கிச் சென்றோம்.
மஹிந்தவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு நானும் கையொப்பமிட்டு கோரியிருந்தேன். எனினும் அது அவருக்கு கிடைக்கவில்லை. இந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியை நாம் வெறுமனே கழிக்க முடியாது.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்த முடியாது. ஜனாதிபதி எம்மை அழைத்தார் நாம் சென்று பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டோம். நாம் தனி நபர்களின் பின்னால் செல்லவில்லை கட்சியுடன் இருக்கின்றோம்.
நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள மாட்டோம், கைச் சின்னத்திலேயே இருப்போம். மத்திய செயற்குழுவின் நிறைவேற்றுக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் நாம் ஆளும் கட்சியில் இணைந்து செயற்படுகின்றோம் என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ad

ad