புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2016

நயன்தாராவுக்கு ஏன் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் : பழ.கருப்பையா விளக்கம்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் 51–வது ஆண்டு விழா மன்ற கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தமிழ் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துறைமுகம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில்,  ‘’இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்கள் வந்த வேலையை விட்டு விட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு தமிழ் சிறப்பு பெற்றது.

இந்தியர்களை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தனியாக இருப்பார்கள். எனவே அவர்களுக்கு இந்தியர்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் குறித்த புத்தகம் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதே நிலை தற்போதும் நீடிக்கிறது. ஆளுநர் வருவதற்கு முன்னாலே அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்ற சட்டம் புத்தகத்தில் உள்ளது. ஆளுநர் வந்த பின்னர் தமிழ்தாய் வாழ்த்து அவருக்கு தெரியாது என்பதால் அவரது இருக்கையில் அமர்ந்து விடுவார்.  பின்னர் அவரது உதவியாளர் முறைகளை கூறிய பின்னர் எழுந்து நிற்பார். இப்படி ஆங்கிலேயன் இந்தியர்களை பயமுறுத்துவதற்கான நடைமுறைகள் இன்று வரை தொடர்ந்து வருகிறது’’என்று கூறினார்.

’’பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது நாணத்தால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். ஆனால் லஞ்ச வழக்கில் சிறை செல்லும் அரசியல்வாதிகள் மக்களை பார்த்து கை அசைத்துக் கொண்டே செல்கின்றனர்’’என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’தற்போது நயன்தாராவுக்கு ரசிகர்கள் அதிமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னர் ஒரு நடிகை இருந்த இடத்தை பிடித்துள்ளார். ஒருவரது புகழ் என்பது அவர் இடத்திற்கு மற்றொருவர் வரும் போது புகழ் புகழால் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இது புகழ் அல்ல. எக்காலத்திலும் வள்ளுவர் புகழை மற்றொருவர் பிடிக்க முடியாது’’ என்றும் தெரிவித்தார்.

ad

ad