புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

விரக்தி காரணமாகவே தவறான உத்தரவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடிதம்



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி ஆகியோருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சி.எஸ்.கர்ணன் செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

கடிதத்தில் கூறியுள்ளதாவது: சக நீதிபதிகளின் ஏளனம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தப்பட்டேன். ஆனால், எனக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்பட்டேன். இதனால், பல அவமானங்களை நான் சந்திக்க நேர்ந்தது.
இவற்றால் எனக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, கடந்த 15ஆம் தேதி தவறான உத்தரவைப் பிறப்பிக்க நேர்ந்தது. இனிவரும் காலங்களில், அனைவரிடமும் இணக்கமாக நடந்து கொண்டு, தங்கள் உத்தரவுக்கு கீழ்படிவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் சி.எஸ்.கர்ணன் கூறியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும், நீதிபதி கர்ணன் அனுப்பியுள்ளார். 

முன்னதாக, சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணனை, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை, தானாக முன் வந்து வழக்காக எடுத்த நீதிபதி கர்ணன், தன்னை பணிமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார்.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட் பதிவாளர் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி கர்ணனுக்கு நீதித்துறை அலுவல்கள் ஏதும் ஒதுக்காமல் இருக்க, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கர்ணன், 'எனக்கு, நீதித்துறை பணிகள் ஒதுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் படி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட உள்ளேன்' என்றார். 

ad

ad