புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2016

ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா் செயிட் அல் ஹுசைனிற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஆணையாளர் ஹுசைன் விஜயம் மேற்கொண்ட போது இவ்வாறு கடிதம் கையளிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்,
போர்க்காலத்தில் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுவினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் நேரடியாக சரணடைந்தவர்கள் தொடர்பில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரும் என நம்பியிருந்த தமக்கு தேசிய பொங்கல் நிகழ்வில் காணாமல்போனவர்கள் தற்போது உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வேதனை அளிப்பதாகவும் அதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறெனில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். காணாமல் போனவர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றே தாம் நம்புகிறோம்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு. இலங்கை அரசாங்கம் சரியான விசாரணையை மேற்கொண்டு தீர்வு பெற்றுத்தரப் போவதில்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad