புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு கடும்
எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவியின் உடலை பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவிகள் பிரியங்கா, சரண்யா, மோனிஷா ஆகியோர் கடந்த ஜனவரி 23-ம் தேதி கிணற்றில் பிணமாக கிடந்தனர். மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மோனிஷாவின் உடல் மட்டும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மோனிஷா நீரில் மூழ்கி இறக்கவில்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சரண்யாவின் தந்தை ஏழுமலையும் தன்னுடைய மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையில், உடலை அடக்கம் செய்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் மறு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதி ஆர்.மாலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏழுமலை மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு ஆகியோர் ஆஜராகி வாதிதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், "மனுதாரர் தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக சொல்கிறார். மறு பிரேத பரிசோதனை கேட்கிறார். இதற்கு அரசு தரப்பில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "சரண்யாவின் உடலை மறுபரிசோதனை செய்ய உத்தரவிடுகிறோம். உடலின் நிலையை பொறுத்த உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியிலேயே டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யலாமா அல்லது அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடலை பரிசோதனை செய்யலாமா என்பது குறித்து டாக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம். மனுதாரர் தன் தரப்பு டாக்டர் ஒருவரை பரிசோதனை குழுவில் இடம் பெற செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதை ஏற்க முடியாது. வேண்டும் என்றால் மனுதாரர் தரப்பு டாக்டர் ஒருவர், பிரேத பரிசோதனையை கண்காணிக்கலாம். இதுகுறித்து விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்" என்றனர்.

இதனிடையே சரண்யாவின் உடல், நாளை அல்லது நாளை மறுநாள் மறு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ad

ad