புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

குலதெய்வம் கோவிலுக்கு மனைவியுடன் சாமி கும்பிட்ட விஜயகாந்த்: கூட்டணி முடிவு?

குலதெய்வ கோவிலுக்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாமி கும்பிட்டுள்ளதை அடுத்து அவர் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குலதெய்வம் கோவிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் விஜயகாந்த் செல்கிறார் என்றாலே,
அவர் முக்கிய முடிவுகளை எடுத்து விட்டார் என்று அர்த்தம் என்று தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இருமாதங்களே உள்ள நிலையில் எதிர்கட்சிகள் அனைத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன, இதில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என தே.மு.தி.க நிர்வாகிகளும் தொண்டர்களும் வலியுறுத்தி வரும் நிலையில்,
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி குறித்து பிரேமலதா தெரிவித்துள்ள கருத்துகள் அந்த கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் விஜயகாந்துடன் தொடர்ந்து பேசி வருவதால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவே அதிக வாய்ப்பு என கருதப்படுகிறது.
மேலும் கடைசி வாய்ப்பாக மட்டுமே அவர் வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியை பயன்படுத்துவார் என கூறப்படுகிறது.

ad

ad