புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2016

சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது


காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலையில், இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து சிங்களத்தில் தேசிய கீதம் வழக்கம் போலப் பாடப்பட்டது.
அதையடுத்து, ஜனாதிபதியின் உரை, முப்படைகளினதும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளின் முடிவில், காலை 11.15 மணியளவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இலங்கையின் வரலாற்றில் நீண்ட காலத்துக்குப் பின்னர், சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
அத்துடன்,  ஜனாதிபதியின் உரை முடிந்த பின்னர், விழா அரங்கில், அதன் தமிழ் மொழிபெயர்ப்பும், வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad