புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2016

யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை மீண்டும் கைது செய்யக் கோருவோம்

யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலி உறுப்பினர்களையும் மீண்டும் கைது செய்யுமாறு அரசாங்கத்தை கோருவோம் என புதிய எச்சரிக்கையை விடுத்துள்ள சிறிசேன அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான சம்பிக்க ரணவக்க இலங்கையின் யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதே பங்களிப்பினை தீவிரமாக எதிர்ப்போம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வடக்கில் மத சுதந்திரமில்லை என்ற  சர்ச்சைக்குரிய கருத்தினையும் முன்வைத்துள்ளார். அரசாங்கம் அதனை செய்யாவிடில் படையினரிற்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைச் செய்யாவிடின் நல்லிணக்க முயற்சிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் தனது கட்சி காணமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஏற்படுத்துவதையும் உடல்கம ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி  சான்றிதழ் வழங்குவதை ஆதரிக்கின்றது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களையும் கட்சி ஆதரிக்கின்றது. அதனால் பொதுமன்னிப்பை வழங்கமுடியுமா என்ற கேள்வி முக்கியமானது. அடுத்தது மதத்தலைவர்களின் கருணைப் பேரவை தொடர்பானது. ஆனால் வடக்கில் மதசுதந்திரம் இல்லை என்பது எமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad