புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

கெயில் திட்டம்... பிரதமருக்கு கடிதம் எழுதிய சில நிமிடங்களில் ஜெ. வழக்கு... இது எப்படி இருக்கு?

கெயில் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிய நில நிமிடங்களில், இந்த திட்டம் தொடர
வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க,  கெயில் நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கூட்டநாடு, மங்களூரு வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழகத்தின் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் நடவடிக்கையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

திட்டமிட்டபடி கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தால் 7 மாவட்டங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். அவர்களது வாழ்வாதாரமான விளைநிலங்கள் கையைவிட்டுப் போகுமென்பதால் விவசாயிகள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க ஆந்திராவில் கெயில் பைப்லைன் விபத்தையும் நினைவுகூற விரும்புகிறேன். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கவும், விளைநிலங்களை காப்பாற்றவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காண வேண்டும். இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிய சில நிமிடங்களிலேயே,  கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் தொடர வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பாலாஜி,  உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கெயில் எரிவாயு திட்டத்தால் ஒரு லட்சத்திற்கு அதிகமான மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்படும். தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதால் விவசாய நிலங்களை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும்" என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad