புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2016

பிறப்புப்பத்திரம் இன்றி அடையாள அட்டை பெறாதோருக்கு புதிய ஏற்பாடு! ஆட்பதிவுத் திணைக்களம்

நாட்டில் தற்போது தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 2லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாததன் காரணமாகவே அடையாள அட்டையை பெறாமலிருக்கின்றனர் என்பது ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
எனவே, வாக்காளர் இடாப்பில் பெயர் இருந்தும் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாதிருக்கின்ற வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றுநிருபத்தை இலங்கை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சகல பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.  மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2014ல் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டு ஆனால், முழு இலங்கையிலும் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதோரின் எண்ணிக்கை 3லட்சத்து 40ஆயிரத்து 604ஆகும்.
அதில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமில்லாமல் 132,870 பேர் அடையாள அட்டை பெறமுடியாமலிருந்தது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரமிருந்தும் ஆர்வமின்மை காரணமாக 120,520 பேர் அடையாள அட்டை பெறவில்லை. ஏனைய காரணங்களினால் 87,207பேர் அடையாள அட்டையைப் பெறவில்லை.
2014அக்டோபரில் பிரதேச செயலாளர்களின் அறிக்கை மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இவ்வெண்ணிக்கையானது 2லட்சத்து 50ஆயிரம் பேராக குறைந்ததாகவும் 2015ல் இத்தொகை நடமாடும் சேவை அறிவூட்டல் நிகழ்ச்சிகளின் மூலம் 17,500 க்கும் 2லட்சத்திற்கும் இடைப்பட்டதாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர் இடாப்பில் பெயரிருந்தும் பிறப்பத்தாட்சிப் பத்திரமில்லாத காரணத்தினால் அடையாள அட்டை பெறமுடியாமல் போனவர்கள் தத்தமது கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் உரிய விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்று பூர்த்திசெய்து அவரது பரிந்துரையுடனும் அப்பிரிவில் வதியும் அடையாள அட்டை வைத்துள்ள மூவரின் சான்றிதழ்களுடனும் இவற்றை உண்மையென வெளிப்படுத்தும் சத்தியக் கடதாசியையும் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.
அதனூடாக அவர்கள் புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad