புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

ஊடகவியலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ரிதீகல வனப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்கிய ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டம் ரிதீகம பிரதேசத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளும், மோசடிகளும் இடம்பெறுவதாகவும், அதற்கான ஆதாரங்களையும் இணைத்து மாவட்ட ஊடகவியலாளர் காஞ்சன ஆரியதாஸ பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். 

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள தொல்பொருட் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பகல் நடைபெற்றது. இது தொடர்பான செய்தி வெளியாகிய பின்னர் தொல்பொருட் திணைக்களத்தின் ஆணையாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்கவினால் பொலிஸ் நிலையத்தில் இதற்கெதிராக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையில் தொல்பொருட் திணைக்கள ஆணையாளர், ஊடகவியலாளர் காஞ்சனவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ad

ad