புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2016

ஒன்ராறியோ மாகாணத்தில் பனிப்புயலுக்கான சிவப்பு எச்சரிக்கை

கனடாவின் ஒன்ராறியோ வட பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் எதிர்வரும் சில நாட்களுக்கு கடுமையான பனிப்புயலின் தாக்கத்தை
எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது.
குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் தீவிர பனி நிலைமை ஏற்படும். குறித்த பனிப்புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒன்ராறியோவின் வட பிராந்தியங்களைத் தாக்கும்.இதன் விளைவாக செவ்வாயக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் மோசமான பனிப்பொழிவு ஏற்படும். எனவே அப்பகுதி மக்கள் மிகவுமு; எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும்
மேலும், புதன்கிழமையின் முடிவில் சுமார் 10 சென்ரிமீற்றர் முதல் 15 சென்ரிமீற்றர் வரையிலான பனிப்பொழிவு ஏற்பட வாய்புண்டு. அதேவேளை திடீர் வானிலை மாற்றத்தினால் இந்த அளவில் மாற்றம் ஏற்படவும் கூடும் என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை கியூபெக்குடனான எல்லைப் பகுதியில் உறை மழைக்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும், அங்கு பனிப்பொழிவுடன் பனிக் கட்டிகளும் விழக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ad

ad