புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

அறிமுகப் போட்டியிலே இந்தியாவை விழிபிதுங்க வைத்த இலங்கை வீரர் கசுன் ராஜித


இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலே இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித அபாரமாக செயல்பட்டார்.
புனேயில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணியில் கசுன் ராஜித என்ற வேகப்பந்து வீச்சாளரும், டிக்வெல்லா என்ற விக்கெட் கீப்பரும் அறிமுகமானார்கள்.
இதில் தொடக்க ஓவரை வீசிய கசுன் ராஜித முதல் ஓவரிலே முக்கிய 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ரோஹித் சர்மாவை டக்- அவுட்டாகவும், ரஹானேவை 4 ஓட்டங்களிலும் அவர் வெளியேற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து 5வது ஓவரில் தவானையும் வீழ்த்தி அசத்தினார்.
அவர் இந்தப் போட்டியில் 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவரது அபார பந்துவீச்சால் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதையும் ராஜித தட்டிச் சென்றார்.
22 வயதேயான ராஜித 10 முதல்தரப் போட்டியில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு இந்தியா இளம் பந்துவீச்சாளர் பும்ராவை தயார்ப்படுத்தும் நிலையில், அதேபோல் இலங்கை அணியும் ராஜிதாவை தயார் செய்யும் நடவடிக்கையில் களமிறங்கும்.

ad

ad