புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2016

சம்பியனானது சுன்னாகம் காந்தி நியூஸ்ரார்

பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகமும் நமக்காக நாம் அமைப்பும் நடாத்திய அணிக்கு 7பேர்
6ஓவர் கொண்ட மாவட்ட மட்ட கிரிக்கெட் போட்டியில் சுன்னாகம் காந்தி நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகமும் நமக்காக நாம் அமைப்பும் நடாத்திய அணிக்கு 7பேர் 6ஓவர் கொண்ட மாவட்ட மட்ட கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டி 31.01.2016 மாலை 3 மணிக்கு மானிப்பாய் அட்டகிரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது அரையிறுதியில் மானிப்பாய் இந்தியன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் மோதியது.
நாணயற்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மானிப்பாய் இந்தியன்ஸ் விளையாட்டுக் கழக அணி 3 விக்கட்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.
அணிக்காக ரஹீம் 56 ஓட்டங்களையும், பவிந்திரன் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி சார்பில் மோகனதீபன் 2 விக்கட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 82 என்னும் வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி ரமணனின் அதிரடி கைகொடுக்க 5 விக்கட்களால் வெற்றி பெற்றது.
இதில் ரமணன் 46 ஓட்டங்களையும், மோகனதீபன் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் மானிப்பாய் இந்தியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் ராம் 2 விக்கட்களைக் கைப்பற்றினார்.

இரண்டாவது அரையிறுதியில் சங்கானை நியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் மோதியது.
நாணயற்சுழற்சியில் வென்ற சங்கானை நியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி 33 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது. யோகசாந் 13 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 34 என்னும் இலக்கோடு துடுப்பாடிய சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் படி இறுதிப் போட்டியில் சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் மோதியது.
நாணயற் சுழற்சியில் வென்ற ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி 4 விக்கட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் ரமணன் 19 ஓட்டங்களையும், கண்ணன் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி சார்பில் செந்தா 2 விக்கட்களைக் கைப்பற்றினர்.பதிலளித்து 59 என்னும் இலக்கோடு துடுப்பாடிய சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி ஒரு கட்டத்தில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களை இழந்து தடுமாறியது.
எனினும் களம் புகுந்த தயாளன் அதிரடி காட்ட இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்டமிழக்காமல் அதிரடியாக 40 ஓட்டங்களைக் குவித்த தயாளன் போட்டியின் சிறப்பாட்டக்காரனாக தெரிவானார்.
cup3
அமைப்பின் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ஆர்.பவிஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,மானிப்பாய் இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறை முதல்வர் எஸ்.உதயணன், முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைப்பின் இயக்குனருமான க.உஷாந்தன், மானிப்பாய் மெற்கு இளைஞர் கழக தலைவர் உதயன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.

ad

ad