புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2016

இந்திய வெளிவிவகார அமைச்சர் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று கொழும்பில் சந்தித்து முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளார்.
நண்பகல் 12 மணியளவில் கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா எம்.பி. (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோரும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் புதிய அரசமைப்பு, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இதன்போது பேசப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 9ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றுக் கொழும்பு வந்துள்ளார். இவர் வடக்கிற்கும் விஜயம் செய்து அங்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசுவார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்து. எனினும், சுஷ்மாவின் வடக்குக்கான விஜயம் இறுதியில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ad

ad