புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2016

முதலமைச்சர் ஜெயலலிதா விஜயகாந்த் மலரஞ்சலி அண்ணா சமாதியில் கலைஞர் மலரஞ்சலி




பேரறிஞர் அண்ணாவின் 47-வது  நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் கலைஞர் தலைமை யில் அமைதிப்பேரணி நடைபெற்றது.  வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை யில் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இப்பேரணி நடைபெற்றது.  கலைஞர் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணா சமாதியில் மலரஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (03.02.2016) பேரறிஞர் அண்ணா  நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு கழக தலைவர்  விஜயகாந்த்  மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கு.நல்லதம்பி எம்.எல்.ஏ, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கண்ணன், வட சென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ், தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன்,  மேற்குசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் மாவட்ட,  பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள்,  கழக மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 47-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

அண்ணா நினவு தினத்தையொட்டி, அவரது புகைப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல், தமிழகம் முழுவதும் அண்ணாவின் புகைப்படங் களுக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

ad

ad