புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்­பார்த்­தி­ருக்­கின்றேன்..முன் னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்­பார்த்­தி­ருக்­கின்றேன். ஆகவேஇவிரைவில் குறித்த பதவி எனக்கு
கிடைக்கப்பெறும் என்று நம்­பு­கின்றேன். அந்த பதவி கிடைக்கு­மி­டத்து அதனை பொறுப்பெ­டுத்து செயற்­ப­டுவேன் என்று முன் னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே மேலும் பதி­ல­ளிக்­கையில்,
நான் எந்த சந்­தர்ப்­பத்­திலும் பட்டம் பத­வி­க­ளுக்கு ஆசைப்­ப­ட­வில்லை. எனக்கு எந்த பதவி கிடைக்­கி­றதோ அதனை ஏற்று பொறுப்­பு­களை சரி­வர நிறை­வேற்­றுவேன். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­மீது அதீத நம்­பிக்கை வைத்­துள்ளார். அந்த நம்­பிக்கையை காப்­பாற்றும் விதத்தில் நான் செயற்­ப­டுவேன்.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச ஆட்­சியில் இருக்கும் போது கட்­சியின் நிறை­வேற்று குழு கூட்­டத்தின் போது நானும், டிலான் பெரே­ராவும் அதா­வுட சென­வி­ரத்­னவும் அதி­கார பர­வ­லாக்­கத்தின் அவ­சி­யத்தை அச்­ச­மில்­லாமல்
எடுத்­து­ரைப்போம்.

என்­னு­டைய கொள்­கையில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மாற்றம் ஏற்­படப் போவ­தில்லை. நாட்­டிற்கு மேலும் சேவை
செய்­வ­தற்கு தயா­ரா­கவே உள்ளேன்.

இந்­நி­லையில், வடமாகாண ஆளுநர் பத­வியை நான் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றேன். ஆகவே, விரைவில் குறித்த பதவி எனக்கு கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றேன். அந்த பதவி கிடைக்குமிடத்து அதனை பொறுப்பெடுத்து செயற்படுவேன் என்றார்.

ad

ad