புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு ..எமது ஊருக்கு செய்யக் கூடிய எதிர்கால திட்டங்கள் சில ... அர்ஜுன் .

நிர்வாக அலகு 1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் 5பேர் (தாய் மண்சார்ந்த திட்டங்களையும் அதன் குறைகளையும் பிரதேச்சபை,புலம்பெயர்அமைப்புக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் பங்களிப்பை தாய்மண்நோக்கி திருப்புவது) 2. ஒருங்கிணைப்பாளர்கள் 24பேர் வட்டார ரீதியாக இருவர்வீதம் ( கல்விதகமை,பேச்சாற்றல்,செயற்திறன் உள்ளவராக இருப்பார் இவருக்கு ஊதியம் உண்டு). இவரின் பணி தனது வட்டாரத்தில் உள்ள சகல விடயங்களையும் தலைமைக்கு அறியத்தருவது. 3. செயல்பாடு. (அந்த அந்த அமைப்புகளுக்கு நகர்த்துதல். உதாரணமாக கல்வி=அமைப்பு 1 வீடுகள்,காணிகள் ,சூழல் துப்பரவு= அமைப்பு 2 விளையாட்டு= அமைப்பு 3 கால்நடைகள் பண்ணை, விவசாயம் =அமைப்பு 4 நீர்வழங்கல் ,நீர்சேமிப்பு =அமைப்பு 5 புனரமைப்பு,பராமரிப்பு=அமைப்பு 6 இப்படியாக பல நல்செயல்திட்டங்கள் வைப்பதன் மூலம் மண்வளர்ச்சிஅடைவதோடு வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெறும்
ஒருகுடையின் கீழ் வரும் அமைப்பின் நிர்வாகம் இயங்கும் முறை இப்படியாக இருக்க வேண்டும்
Arjunpictures

1. எமது ஊரின் வளங்களை இனம்காணல் 2. படித்த இளையோர்களை ஊதியஅடிப்படையில் வட்டாரம் தோறும் நியமித்தல் 3. குறைகளும் அதற்கான சுலபமான தீர்வுஎடுத்தல் 4.பாடசாலைக்கல்வி முடிந்ததும் தொழில்சார் கல்வி பெற வழிசமைத்தல் 5. விவசாயமுயற்ச்சியாளர்களை ஊக்குவித்தல்
6. நன்நீர் சேமிப்பு ஊக்குவிப்பு 7. கைத்தொழில் உற்பத்தி சந்தைபடுத்தல் ஊக்குவிப்பு 8. நூலகம் அமைத்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தல் 9.மைதானங்கள் புனரமைத்து விளையாட்டை ஊக்குவித்தல் 10. எமது ஊரின அரிய இடங்களை புனரமைத்தும் கடற்கரைகளை அழகுபடுத்தியும் சுற்றூலாப்பிரதேசம் ஆக்குதல் 11.மரநடுகை ஊக்குவித்தல் 12. எமது ஊரின் அறிஞர்கள் முதல் கலைஞர் வரை வரவழைத்து அடிக்கடி மக்கள் சந்திப்புக்கு வழிசமைத்தல் 13. எமது வாக்குவங்கியை எம்பிரதேச வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் அரசியல்வாதிக்கு கொடுத்து அரசாங்க நன்மைகள் பெற்று நம்ஊரினை வளப்படுத்தல்(வைத்தியசாலை,பாடசாலை,போக்குவரத்துவசதி,நிழல்குடைகள் அமைத்தல், என பல)
இந்த திட்டங்கள் நடைமுறையில் வர வெறும் 6 மாதங்கள் போதும். எல்லோரும் ஒன்றுபடும்பட்சத்தில்

ad

ad