புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2016

நாக்-அவுட் முறையில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்ற மேரி கோம்

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் 11-வது நாளான நேற்றும் இந்தியாவின் தங்க வேட்டை தாராளமாக அரங்கேறியது. குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடந்த 7 எடைப்பிரிவு பந்தயங்களிலும் இந்தியா தங்கம் வென்றது. 

இன்று மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற 51 கிலோ மகளிர் குத்துச்சண்டை இறுதிச் சுற்றில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மேரிகோம், இலங்கையைச் சேர்ந்த அனுஷாவை நாக் அவுட் செய்து வெற்றி பெற்றார். இந்தப் போட்டி 90 நொடிகளே நீடித்தது.

ஆரம்பத்திலிருந்து மோரி கோமின் சராமாரியான தாக்குதலால் நிலைகுலைந்த அனுஷாவுக்கு முதலில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மருத்துவ உதவிகளைப் பெற்றார். பிறகு போட்டி தொடர்ந்தபோதும் மேரி கோம், தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியதால் அனுஷா வளையத்தை விட்டு வெளியே விழுகிற நிலைமை உருவானது. அப்போது நடுவர் போட்டியை நிறுத்தி மேரி கோம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்தப் போட்டியினால் அனுஷாவுக்கு ஏற்பட்ட காயங்கள் சரியாக எப்படியும் 2, 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. போட்டி முடிவடைந்தவுடன் அழுதபடி அரங்கை விட்டு வெளியேறினார் அனுஷா.

ad

ad