புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

வடமாகாண சபையின் ஆளும் கட்சி பிளவுபடும் அபாயம்! முதல்வருக்கும் அவைத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

5ம் அமர்வில் வெளிப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய அமர்வில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவர் மீது மற்றவர் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.
வடமாகாண சபையின் 45ம் அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது முதல் தடவையாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் உருவானது.
கூட்டுறவு துறையில் இடம்பெற்ற குழறுபடி ஒன்று தொடர்பாக சபைக்கு தெரிவித்த போது, மேற்படி குழறுபடி தொடர்பான சில தகவல்களை சபைக்கு தெரியப்படுத்தினார்
இதன்போது அவ்வாறு தெரிவிப்பது பிழையான விடயம் என அவைத்தலைவருக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.  இதன்போது அந்த குழுவை உருவாக்கியது நானே என அவைத்தலைவர் கூற,
உருவாக்கியதுடன் உங்கள் பணி நிறைவடைந்தது. அதற்குப் பின்னர் செய்ய வேண்டிய விடயங்களை அந்த குழு செய்யட்டும் நீங்கள் அதனை செய்ய வேண்டியதில்லை என முதலமைச்சர் கூற, இருவருக்குமிடையில் தர்க்கம் மூண்டது.
தொடர்ந்து கூட்டுறவுதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எழுந்து கூட்டுறவுதுறை மீது வேண்டுமென்றே அவைத்தலைவரினால் சில சோடிப்புக்கள் செய்யப்படுவதாகவும், அவைத்தலைவர் தமக்கு எழுதும் கடிதங்களில் கூட்டுறவு அமைச்சர் என குறிப்பிடாமல் தமது சிறப்புரிமையினை பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அவைத்தலைவரும் அமைச்சருக்குமிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் சிறிது நிமிடங்கள் நீடித்தது.
பின்னர் கூட்டுறவு அமைச்சர் என்பதை தாம் குறிப்பிடாமை தவறு என சுட்டிக்காட்டியதுடன், அதனை தாம் வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் கூறியதுடன் சபையில் வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து அமர்வு நிறைவடையும் தருணத்தில் மாகாணசபை புளொட் உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவற்றுக்கு முதலமைச்சர் வி சாரணை நடத்தவேண்டும் என பிரேரணை ஒன்றை சபைக்கு பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக கொண்டுவந்தார்.
இதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முதலமைச்சர் எழுந்து பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை கொண்டுவரப்படும்போது அது தொடர்பாக முன்னதாகவே தெரிவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை மீறி எப்படி உடனடியாக இந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.
பின்னர் அமைச்சர் எழுந்து இந்த விடயம் அவைத்தi லவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் முழுமையாக நடத்தப்படுகின்றது என குற்றஞ்சாட்டிய நிலையில் மீண்டும் சபையில் வாய்த்தர்க்கம் மூண்டது.
இதில் சில உறுப்பினர்களும் இணைந்து கொண்டு அமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் பெரும்பாலான உறுப்பினர்கள் சபையில் அமைதியாக இருந்தனர். இந்நிலையில் எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் எழுந்து பாவம் மக்கள் என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் 1984ம் ஆண்டு காலப்பகுதியில் வெளியானது.
அதனை எடுத்து இங்கே உள்ள உறுப்பினர்கள் பார்ப்பதற்கு வையுங்கள் என கூறியதுடன், பொதுமக்களுடைய வரிப் பணத்தில் இந்த சபை அமர்வை நடத்திக் கொண்டு பொதுமக்கள் பிரச்சினை பற்றி பேசாமல் உங்கள் ஆளும்கட்சி விடயங்களை பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.
ஆளும்கட்சி விடயங்களை பேசுவதற்கு உங்களுக்கு ஆளும்கட்சி கூட்டங்கள் இருக்கின்றன. அதை விடுத்து இங்கே ரவிகரன் கேப்பாபிலவு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு உதவுங்கள் அந்த மக்கள் உயிரை மாய்த்துக் கொள்ளப்போகின்றார்கள் என கூறியபோது,
அதற்கு பேச இடம்கொடுக்க மறுத்தீர்கள் ஆனால் தங்களுடைய ஆளும்கட்சி விடயங்களை இவ்வளவு நேரம் எடுத்து பேசுகிறீர்களே என கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளும்கட்சி உறுப்பினர்களே கொண்டுவந்த தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

ad

ad