வெள்ளி, பிப்ரவரி 26, 2016

இன்று பிபாவின் புதிய தலைவர் தெரிவாகிறார்

செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை  தொடர்ந்து அவரது  பதவி நீக்கத்தின் பின்  நடக்கும்  இந்த தெரிவில்  மற்றுமொரு  சுவிஸ்  நாட்டவரான வாலிஸ்  மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோவும் பாக்றேன் நாட்டவரான சைக் சல்மானும்  கடும் போட்டியில் உள்ளனர் .மற்றய   வேட்பாளர்களாஜோர்தானின் பிரின்ஸ் அலி ,பிரான்சின்  ஜெரோம் சம்பெயின்,தென்னாபிரிக்காவின் டோக்யோ  செச்வேல் ஆகியோ ர்   வெற்றி பெறுவது கஷ்டம்   இஞ்சண்டிநோவுக்கு   ஆதரவளிக்க வல்ல  அணிகளாக     ஐரோப்பிய தென்  அமெரிக்க நாடுகளும்   மற்றும் கனடாவும் ஆதரவளிக்கி ன்றன சைக் சல்மானுக்கு  அபிரிக்க ஆசிய நாடுகள் ஆதரவு கொடுக்கின்றன  207 அணிகள் வாக்களிக்கும் இந்த  வாக்கெடுப்பில் முதல் சுற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 138 வாகுகள் பெற வேண்டும் .இரண்டாவது வாக்கெடுப்பில் 104 க்கு மேல் எடுக்க  வேண்டும்