புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன இயக்கம்: மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத்தலைவர் கண்ணையாகுமார்  மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை புதுடில்லி காவல்துறையினர்   மத்திய  பிஜேபி அரசின் தலையீட்டால் பல்கலை வளாகத்திற்குள் புகுந்து கைது செய்து, தேச விரோதிகள் என குற்றம்  சுமத்தி சிறையில் தள்ளினர். இதுபோல் புதுடில்லி நீதிமன்ற வளாகத்தில் ஆர்எஸ்எஸ் வன்முறையாளர்களால் - பேராசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். டில்லியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டது.  

புனேயிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட துயரச்சம்பவம், சென்னை ஐஐடி மற்றும் கொல்கத்தா அருகிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக சம்பவங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் மதவெறி சக்திகள் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் தங்களின் இந்துராஷ்டிரா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் சதித்திட்டத்தின் வெளிப்பாடாகவே உள்ளன. 

மதவெறி இந்துத்துவ சக்திகளுக்கும், பிஜேபி ஆட்சிக்கும் துணை நிற்கவில்லை என்பதற்காகவே பாஜக அரசு இத்தகைய தாக்குதலை மாணவர்கள் மீதும், கல்வி நிறுவனங்கள் மீதும்  திட்டமிட்டு  நடத்தி வருகிறது. இதனை கண்டிப்பவர்கள் மற்றும் போராடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடத்துவோர்  அனைவர் மீதும் தேச விரோத முத்திரை குத்தி தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. 
மேலும், மத்திய பாஜக ஆட்சியில் தொழிலும், விவசாயமும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை அதிகரித்துள்ளன. மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருகின்றனர். அதிகரித்துள்ள துன்ப துயரங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஆட்சியை தக்க வைக்கும் நோக்குடன்  ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மக்களிடையே இதுபோன்ற மதவெறி கிளறி, மோதலைத் தூண்டும்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்தும், 

பொய்யாக தேச விரோத குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிடப்பட்டுள்ள மாணவர் தலைவர் கண்ணையா குமாரை விடுவிக்கக் கோரியும், 

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மீதும்  - இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை மீதும் - இடதுசாரி ஜனநாயக சக்திகள்  மீதும்  பிஜேபியும் - ஆர்எஸ்எஸ்-சும் இணைந்து தொடுக்கும் வன்முறை தாக்குதலை  கண்டித்தும் இடதுசாரி இயக்கங்கள் நாடு தழுவிய இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. 

தமிழகத்தில் மேற்கண்டவற்றை முன்னிறுத்தி   2016, பிப்ரவரி 23 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன இயக்கம் நடத்திட அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளையும், மற்றும் அமைப்புகளையும் வேண்டுகிறோம். 

சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ(எம்), இரா.முத்தரசன், சிபிஐ, பாலசுந்தரம் சிபிஐ(எம்எல்)லிபரேசன், ரெங்கசாமி(எஸ்யுசிஐ-சி) மற்றும் மதிமுக, விசிக மாவட்டத்தலைவர்கள் தலைமையில் பெருந்திரள் கண்டன இயக்கம் நடைபெறுகிறது. 

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலும், விழுப்புரத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலும் கண்டன இயக்கம் நடைபெறுகிறது.  இதுபோல் இதர மாவட்டங்களிலும் பெருந்திரள் கண்டன இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.க்குதல் சம்பவம் நடந்துள்ளது. இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் மதவெறி சக்திகள் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் தங்களின் இந்துராஷ்டிரா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் சதித்திட்டத்தின் வெளிப்பாடாகவே உள்ளன. 

மதவெறி இந்துத்துவ சக்திகளுக்கும், பிஜேபி ஆட்சிக்கும் துணை நிற்கவில்லை என்பதற்காகவே பாஜக அரசு இத்தகைய தாக்குதலை மாணவர்கள் மீதும், கல்வி நிறுவனங்கள் மீதும்  திட்டமிட்டு  நடத்தி வருகிறது. இதனை கண்டிப்பவர்கள் மற்றும் போராடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடத்துவோர்  அனைவர் மீதும் தேச விரோத முத்திரை குத்தி தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. 
மேலும், மத்திய பாஜக ஆட்சியில் தொழிலும், விவசாயமும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை அதிகரித்துள்ளன. மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருகின்றனர். அதிகரித்துள்ள துன்ப துயரங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஆட்சியை தக்க வைக்கும் நோக்குடன்  ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மக்களிடையே இதுபோன்ற மதவெறி கிளறி, மோதலைத் தூண்டும்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்தும், 

பொய்யாக தேச விரோத குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிடப்பட்டுள்ள மாணவர் தலைவர் கண்ணையா குமாரை விடுவிக்கக் கோரியும், 

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மீதும்  - இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை மீதும் - இடதுசாரி ஜனநாயக சக்திகள்  மீதும்  பிஜேபியும் - ஆர்எஸ்எஸ்-சும் இணைந்து தொடுக்கும் வன்முறை தாக்குதலை  கண்டித்தும் இடதுசாரி இயக்கங்கள் நாடு தழுவிய இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. 

தமிழகத்தில் மேற்கண்டவற்றை முன்னிறுத்தி   2016, பிப்ரவரி 23 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன இயக்கம் நடத்திட அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளையும், மற்றும் அமைப்புகளையும் வேண்டுகிறோம். 

சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ(எம்), இரா.முத்தரசன், சிபிஐ, பாலசுந்தரம் சிபிஐ(எம்எல்)லிபரேசன், ரெங்கசாமி(எஸ்யுசிஐ-சி) மற்றும் மதிமுக, விசிக மாவட்டத்தலைவர்கள் தலைமையில் பெருந்திரள் கண்டன இயக்கம் நடைபெறுகிறது. 

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலும், விழுப்புரத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலும் கண்டன இயக்கம் நடைபெறுகிறது.  இதுபோல் இதர மாவட்டங்களிலும் பெருந்திரள் கண்டன இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad